Tuesday 2 October 2012

aippasi matha tamil rasi palan

மேஷம்
உடல் உஷ்ணம் கூடும். இதனால் அல்சர் பல் சிதைவு நோய் தோன்றும். சண்டை சச்சரவு உண்டு. குடும்ப பிரிவு ஏற்படும்.வெளிநாடு பயணம் செல்வீர்கள். சுப காரியங்கள் நடப்பதில் தாமதம் ஏற்படும்.

ரிஷபம்
உஷ்ணத்தால் உடல்நிலை பாதிக்கும், இருப்பினும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. தொழிலில் நல்ல லாபத்தை அடைவீர்கள். மாணவர்களுக்கு நல்ல காலமாக அமையும்.

மிதுனம்
உடல்நிலை பாதிக்கும்,செலவும் அதிகரிக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் சண்டை சச்சரவு உண்டு.வெளிநாடு செல்வதில் சிரமம் உண்டு.தொழில் விருத்தி உண்டு. திருமண முயற்சி தாமதபடும்.

கடகம்
மன கஷ்டம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு தன விரையம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்விக்கு ஏற்ற நிலை ஏற்படும்.

சிம்மம்
சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. காரிய சித்தி உண்டாகும். தொழிலில் சுமாரான காலம். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு தாமதபடும்.

கன்னி
கண் உபத்திரம் ஏற்படும். தன விரையம், பிறரால் ஏமாற்றபடுவீ ர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் விருத்தி அடைய இன்னும் சில காலம் பொறுமையாய் இருபது நல்லது.

துலாம்
நோயால் கஷ்டபடுபவர்களுக்கு நோயின் வீ ரியம் குறையும். குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படும். தீர்த்த யாத்திரை செல்லும் வாயப்பு உண்டு.

விருச்சகம்
உடல் உஷ்ணம்  அதிகரிக்கும். குடும்பத்தில் பிரிவு ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். புதிய தொழில் துவங்க உகந்த நேரம் அல்ல.

தனுசு
நீங்கள் அமைதியை கடைபிடிப்பது நல்லது, எதிலும் பயம் மேலிடும். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள்.

மகரம்
உடல் நிலை ஆரோக்யமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழிலில் எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும். வாகனம் நிலம் வாங்கும் யோகம் உண்டு. அரசு ஊழியர்களுக்கு உத்தியோக உயர்வு உண்டு.

கும்பம்
உடல்நிலை சுமாராக இருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்
அஜீரண கோளாறு உண்டாகும். பெண்களால் துன்பம் நேரும். மாணவர்களுக்கு நன்மை உண்டாகும். வேலைகாரர்களின் விசனம் ஏற்படும்.